2030ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களுக்கும் அதிவேக இணைய வசதி!

2030ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களுக்கும் அதிவேக இணைய வசதி!

2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் கிராமப்புறங்களிலும் அதிவேக இணைய வசதியை விரிவுபடுத்தும் நோக்கில், புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரி விலக்கு வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

 

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த முன்மொழிவு இடம்பெற்றுள்ளது.

 

இதன் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கிராமப்புறங்களில் தமது சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், பிராட்பேண்ட் மற்றும் அதிவேக இணைய இணைப்புகளை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிக்கப்படவுள்ளன.

 

நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலான இணைய வசதி இடைவெளியைக் குறைத்து, 2030ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் மேம்பட்ட இணைய இணைப்பை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Recommended For You

About the Author: admin