மூன்று அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.110 பில்லியன் – 2027 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!

மூன்று அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ.110 பில்லியன் – 2027 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்காக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 110 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

 

இதற்கமைய, குருநாகல் – கலேவெல வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பகுதிக்கு 30 பில்லியன் ரூபாயும், ருவன்புர அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு 27 பில்லியன் ரூபாயும் ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.

 

மேலும், கடவத்தை – மீரிகம வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளுக்காக 53 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

 

இந்த நிதி ஒதுக்கீடுகள் மூலம் குறித்த மூன்று நெடுஞ்சாலைத் திட்டங்களின் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin