சுகததாச விளையாட்டு வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்காக ரூ 1,500 மில்லியன் ஒதுக்கீடு
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இலங்கையின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கும், வீரர்களை ஊக்குவிப்பதற்கும் முக்கிய நிதி ஒதுக்கீடுகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இதற்கமைய, கொழும்பில் அமைந்துள்ள சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் இலங்கை வீரர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் ஊக்குவிப்புப் பரிசும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு 75 மில்லியன் ரூபாய் பரிசும் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வீரர்களின் சாதனைகளை ஊக்குவிப்பதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும்.

