உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைப் புறக்கணிக்கும்படி ஜெர்மனி முழுவதும் விளையாட்டு அரங்கங்களில் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இம்மாதம் கத்தாரில் நடைபெறும் இந்த போட்டியை புறக்கணிக்குமாறு ஜேர்மனி மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டார்ட்மண்ட் (Dortmund) நகரில் டார்ட்மண்ட் அணியின் ஆட்டத்தின்போது ரசிகர்கள் BOYCOTT QATAR 2022 அதாவது கத்தார் 2022 புறக்கணி என்ற பதாகையைப் பிடித்துக்கொண்டு நின்றனர்.
விளையாடிய நிமிடங்களைக் காட்டிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம் என்று அவர்கள் இன்னொரு பதாகையில் குறிப்பிட்டனர்.
கத்தாரில் காற்பந்து விளையாடப்படக்கூடிய நேரமான 5,760 நிமிடங்களைக் காட்டிலும் அங்கு உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையான 6,500 அதிகம் என்பதை அது குறிக்கின்றது.
ஆனால் 6,500 வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலைக் கத்தார் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
பேயர்ன் முனிச், ஹெர்தா பெர்லின் ஆகிய குழுக்களின் ரசிகர்களும் இரு குழுக்களுக்கு இடையிலான ஆட்டத்தின்போது அத்தகைய பதாகைகளை ஏந்தி நின்றனர்.