அஸ்வெசும பயனாளர்களுக்கு 4% வட்டியில் கடன் வழங்கத் திட்டம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு 4% வட்டியில் கடன் வழங்கத் திட்டம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில், சமூர்த்தி வங்கிகள் ஊடாக 4 வீத சலுகை வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன் மூலம் அஸ்வெசும பயனாளர்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் தேவையான நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை நேரடி நிதியுதவியில் மட்டும் தங்கியிருக்கச் செய்யாமல், அவர்களின் பொருளாதார சுயநிலையை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

 

இந்தக் கடன் திட்டம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் தகுதி நிபந்தனைகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளன.

Recommended For You

About the Author: admin