இரத்மலானை விமான நிலைய ஓடுபாதையை 1,771 மீற்றர் வரை நீடிக்க ரூ.6,000 மில்லியன் ஒதுக்கீடு!
இரத்மலானை விமான நிலையத்தின் ஓடுபாதையை 1,771 மீற்றர் வரை விஸ்தரிப்பதற்காக 6,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரத்மலானை விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, விமானப் போக்குவரத்துச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஓடுபாதை விஸ்தரிப்புத் திட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் விமான நிலையத்தின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்காக 6 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

