வருமானம்.. ஆசை யாரை விட்டது.. தலைமறைவான காதலனை தட்டித் தூக்கிய பொலிஸார்.!

மாசம் 2 இலட்சத்திற்கு மேல் வருமானம்.. ஆசை யாரை விட்டது.. தலைமறைவான காதலனை தட்டித் தூக்கிய பொலிஸார்.!

”நல்லா போயிட்டு இருந்த வாழ்க்கையை பேராசையால நாமளே எப்படி அழிச்சுக்கிறோம் என்பதற்கு மதுரை இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி நாச்சியார் மற்றும் அவரது காதலால் சம்பவமே ஒரு பெரிய சாட்சி”

மாசம் ₹2 லட்சம் வரை இன்ஸ்டாகிராம், யூடியூப் மூலமா நேர்மையான வழியிலயே வருமானம் வந்துட்டு இருந்துச்சு. நகைக்கடை விளம்பரங்கள்ல நடிச்சு நல்ல பெயரும் எடுத்தாங்க. ஆனா, “சீக்கிரமே பெரிய வீடு கட்டி, ஆடம்பரமா வாழணும்” என்ற குறுக்குப் புத்தி, விளம்பரத்துக்காக போன அதே மதுரை தனிஷ்க் (Tanishq) நகைக்கடையிலேயே கைவைக்க வச்சிருக்கு.

பல கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடிச்சு மண்ணுக்குள்ள புதைச்சு வச்சாலும், போலீஸோட விசாரணையில இருந்து தப்பிக்க முடியல. பெரிய வீட்டுல ராஜ வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு, இன்னைக்கு கம்பி எண்ணிக்கிட்டு இருக்கு இந்த இன்ஃப்ளூயன்சர் ஜோடி.

இதில் இருந்து நாம கத்துக்க வேண்டிய பாடம் ஒண்ணே ஒண்ணுதான்:

👉 வரவுக்கு மீறிய ஆசையும், குறுக்கு வழியில பணம் சேர்க்கணும் என்ற எண்ணமும் என்னைக்குமே அழிவுலதான் போய் முடியும்.

👉 நிம்மதியான வாழ்க்கைக்கு நேர்மையான உழைப்பும், போதுமென்ற மனசுமே போதும்!

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த யூடியூபர் நிஷாந்தை, தருமபுரி அருகே பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Recommended For You

About the Author: admin