பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலனுக்காக 22 மில்லியன் ரூபா செலவில் புதிய விடுதி

பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலனுக்காக 22 மில்லியன் ரூபா செலவில் புதிய விடுதி

கொழும்பு கெசல்வத்த பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சுமார் 22 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (15) காலை, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தலைமையில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது.

 

அதிக சனநெரிசல் கொண்ட பகுதியாகக் காணப்படும் கெசல்வத்தையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறந்த சூழலில் தமது கடமைகளை முன்னெடுக்கவும், அவர்களின் நலன்புரியை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, கொழும்பு மத்திய பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்கவின் வழிகாட்டலில் இந்தப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin