7 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இலங்கை!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (09) ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
இறுதியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் 1–0 என வெற்றிபெற்றது.
மேலும், 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இலங்கை அணி எதிர்பார்த்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு தொடரையும் பாகிஸ்தான் 2–0 எனக் கைப்பற்றியிருந்தது.

