கத்தாரில் நடைபெறவுள்ள FIFA U-17 உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்!
கத்தாரில் நடைபெறவுள்ள FIFA U-17 உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடருக்கான 2026ஆம் ஆண்டு போட்டிகளின் டிக்கெட் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் roadtoqatar.qa என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Day Pass மூலம் Aspire Zone மைதானத்தில் ஒரே நாளில் நடைபெறும் அதிகபட்சம் 8 போட்டிகளைப் பார்வையிட முடியும். அத்துடன், ரசிகர் வலயத்தில் (Fan Zone) நடைபெறும் கலாசார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம்.
குழுநிலைப் போட்டிகள், 32 அணிகள் சுற்று (Round of 32), 16 அணிகள் சுற்று (Round of 16) மற்றும் காலிறுதிப் போட்டிகளுக்கான Day Pass ஒன்றின் விலை 20 கத்தார் ரியால்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிக வரவேற்பைப் பெறும் முக்கியமான போட்டிகளுக்கான இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதியுடன் Prime Pass டிக்கெட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி ரசிகர்கள் தங்களுக்கான விசேட இருக்கைகளைப் பெற்றுக்கொள்வதுடன், வாகன நிறுத்துமிட வசதியையும் கோர முடியும். இதற்காக accessibility.tickets@sc.qa என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
அனைத்து டிக்கெட்டுகளும் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

