கத்தார், சவூதி, தென்கொரியா உள்ளிட்ட 5 நாடுகள் பங்கேற்கும் கால்பந்து போட்டிகள் – டிக்கெட் விற்பனை ஆரம்பம்! 

கத்தார், சவூதி, தென்கொரியா உள்ளிட்ட 5 நாடுகள் பங்கேற்கும் கால்பந்து போட்டிகள் – டிக்கெட் விற்பனை ஆரம்பம்!

கத்தாரில் எதிர்வரும் நவம்பர் 13 மற்றும் 17ஆம் திகதிகளில் சர்வதேச கால்பந்து நட்புறவுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் கத்தார், சவூதி அரேபியா, தென் கொரியா, அவுஸ்திரேலியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அணிகள் பங்கேற்கவுள்ளன.

நவம்பர் 13ஆம் திகதி சவூதி அரேபியா – தென் கொரியா அணிகளும், கத்தார் – அவுஸ்திரேலியா அணிகளும் மோதவுள்ளன.

நவம்பர் 17ஆம் திகதி கத்தார் – தென் கொரியா அணிகளும், சவூதி அரேபியா – உஸ்பெகிஸ்தான் அணிகளும் மோதவுள்ளன.

போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் 15 முதல் 30 கத்தார் ரியால் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மேலும், நவம்பர் 19 முதல் டிசம்பர் 13 வரை FIFA U-17 உலகக்கிண்ணப் போட்டிகளையும் கத்தார் நடத்தவுள்ளது.

டிக்கெட் முன்பதிவு: http://www.roadtoqatar.qa/

Recommended For You

About the Author: admin