இலங்கை விமான சேவைக்கு 35.6 பில்லியன் ரூபாய் நட்டம்! அதிகரிக்கும் விமான எரிபொருள் செலவு

இலங்கை விமான சேவைக்கு 35.6 பில்லியன் ரூபாய் நட்டம்! அதிகரிக்கும் விமான எரிபொருள் செலவு

இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், 2026/2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 35.6 பில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் வருமானம் 82.8 பில்லியன் ரூபாயாக அதிகரித்த போதிலும், செலவினங்கள் 95.2 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளன.

 

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலையால் விமான எரிபொருள் செலவு 93 சதவீதத்தால் அதிகரித்தமையே இதற்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடன் சுமை, பராமரிப்புச் செலவுகள் மற்றும் பணப்புழக்கப் பிரச்சினைகளும் விமான சேவையின் நிதி நிலைத்தன்மைக்கு சவாலாக அமைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin