காஸாவில் குளிர்காலப் புயல்! 70,000 கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கின!
காஸாவில் வீசிய முதல் குளிர்காலப் புயலால், இடம்பெயர்ந்த பாலஸ்தீனிய மக்கள் தங்கியிருந்த சுமார் 70,000 கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பருவத்தின் முதல் குளிர்காலப் புயல் வீசிய வெறும் 12 மணி நேரத்திற்குள் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.
காஸா மக்களின் தங்குமிட நெருக்கடியைச் சமாளிப்பதற்கு மேலும் 200,000 முதல் 300,000 வரையிலான புதிய கூடாரங்கள் அல்லது தங்குமிட வாகனங்கள் தேவைப்படுவதாக உதவி அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும், தங்குமிடங்களைக் கட்டுவதற்கான பொருட்கள், எரிபொருள் மற்றும் கனரக இயந்திரங்கள் காஸாவிற்குள் கொண்டுவரப்படுவதில் நிலவும் தடைகளுக்கு இஸ்ரேலே பொறுப்பு என அந்த அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் காஸா மக்கள், தற்போது இயற்கையின் கடுமையான பாதிப்பையும் எதிர்கொண்டுள்ளனர்.
காஸா மக்களின் துயரங்கள் நீங்கி, அவர்களுக்கு பாதுகாப்பும் நிவாரணமும் கிடைக்க நாம் அனைவரும் அதிகமதிகமாக துஆ செய்வோம்!
🤲 யா அல்லாஹ்! காஸா மக்களுக்கு உதவி செய்வாயாக!

