அனுமதியின்றி 39 ட்ரோன்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதா? நளின் பண்டாரவிடம் CID விசாரணை!

அனுமதியின்றி 39 ட்ரோன்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதா? நளின் பண்டாரவிடம் CID விசாரணை!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, உரிய அனுமதியின்றி 39 ட்ரோன்களைக் கொண்டுவந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிங்கப்பூரிலிருந்து வந்த அவரிடம் குறித்த ட்ரோன்கள் காணப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றை நாட்டிற்குள் கொண்டுவர இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் அவசியமாகும்.

இதற்கமைய, ட்ரோன்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், உரிய அனுமதிகளைச் சமர்ப்பிக்குமாறு எம்.பி.க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சுங்கத் திணைக்களமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Recommended For You

About the Author: admin