18 வயதில் ஆபத்தான வேலையில் ஈடுபட்ட எலான் மஸ்க்! ஒரு மணி நேரத்திற்கு 18 டொலர் சம்பளம்!
இன்று உலகின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழும் எலான் மஸ்க், Tesla மற்றும் SpaceX நிறுவனங்களை உருவாக்குவதற்கு முன்பு தனது இளமைப் பருவத்தில் கடினமான உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ளார்.
கனடாவில் வாழ்ந்த காலத்தில், 18 வயதில் மர ஆலை ஒன்றில் கொதிகலன் அறையைச் சுத்தம் செய்யும் கடினமான வேலையை அவர் செய்துள்ளார்.
இந்த வேலைக்காகப் பாதுகாப்பு உடை அணிந்து, குறுகிய சுரங்கப்பாதை போன்ற இடத்திற்குள் சென்று கொதிகலனில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்ற வேண்டியிருந்ததாக அவரது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு 18 அமெரிக்க டொலர் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வாரத்தின் தொடக்கத்தில் 30 பேர் இந்தப் பணியில் இணைந்த நிலையில், வார இறுதியில் எலான் மஸ்க் உட்பட மூவர் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தொழிலதிபராக உருவெடுப்பதற்கு முன்பு அவர் எதிர்கொண்ட கடினமான வேலைகளில் இதுவும் ஒன்றாகும்.

