ஐசென்காட் – நெதன்யாகு ஒரே மாதிரியான கொள்கைகளைக் கொண்டவர்கள்! டிரம்ப் கருத்து
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், காடி ஐசென்காட்டும் ஒரே மாதிரியான அரசியல் கொள்கைகளையும் பார்வைகளையும் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு காடி ஐசென்காட்டுக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் தமது கொள்கைகள் மற்றும் பார்வைகளில் மிகவும் ஒத்தவர்கள் என்றும், இருவரும் தனது நடவடிக்கைகளுக்கு ஆதரவானவர்கள் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
முன்னதாக, இஸ்ரேலிய தேர்தலுக்கு முன்னர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு டிரம்ப் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

