ஜேர்மனியில் வரலாறு படைக்கப்போகும் பெண்! 

ஜேர்மனியில் வரலாறு படைக்கப்போகும் பெண்!

முதல் பெண் ஜனாதிபதியாக இல்சே ஐக்னர்?

ஜேர்மனியின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), பவேரிய மாநில நாடாளுமன்றத்தின் தலைவரும், கிறிஸ்தவ சமூக ஒன்றியக் கட்சியின் (CSU) முக்கிய அரசியல் தலைவருமான இல்சே ஐக்னரை (Ilse Aigner), நாட்டின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக ஆதரித்துள்ளார்.

 

நவம்பர் 9ஆம் திகதி ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சியும் (CDU) அவரை அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவித்துள்ளது.

 

தற்போதைய ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டைன்மையரின் பதவிக்காலம் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து, 2027 ஜனவரி 30ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டாட்சி மாநாட்டின் வாக்கெடுப்பில் இல்சே ஐக்னர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜேர்மனியின் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெறுவார்.

இதுவரை ஜேர்மனியின் உயரிய அரசுத் தலைவர் பதவியை 12 ஆண்களே வகித்துள்ள நிலையில், ஐக்னரின் தேர்வு அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமான மாற்றமாக அமையக்கூடும்.

ஜேர்மனிக்கு முதல் பெண் ஜனாதிபதி கிடைக்கப்போகிறாரா? உலக நாடுகளின் கவனம் தற்போது ஜேர்மனி பக்கம் திரும்பியுள்ளது!

Recommended For You

About the Author: admin