இலங்கை U17 தேசிய அணியில் அல்லைப்பிட்டி வீரர் தேவகுமார் சாருஜன்!

இலங்கை U17 தேசிய அணியில் அல்லைப்பிட்டி வீரர் தேவகுமார் சாருஜன்!

50 ஆண்டுகளுக்கும் மேலான கால்பந்துப் பாரம்பரியம் கொண்ட அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 16 வயதான தேவகுமார் சாருஜன், இலங்கையின் 17 வயதுக்குட்பட்ட தேசிய கால்பந்து அணிக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை லாவோஸில் நடைபெறவுள்ள ஆசிய U17 கால்பந்துத் தொடரில், இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் களமிறங்கவுள்ளதாகப் பகிரப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டியின் முதலாவது தேசிய கால்பந்து வீரராகத் தெரிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படும் சாருஜனின் சாதனை, அவரது ஊருக்கும் தீவகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

உங்களால் தீவகம் பெருமை கொள்கின்றது! 🩷

சர்வதேசக் களத்தில் சிறப்பிக்க வாழ்த்துகள், சாருஜன்!

Recommended For You

About the Author: admin