மூன்று நாடுகளில் டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் ஹேக்! ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பு – பெரும் அதிர்ச்சி!
எகிப்து, மலேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டு, அவற்றில் ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தின் கிசா நகரில் பரபரப்பான நெடுஞ்சாலையொன்றில் அமைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பரத் திரைகளில் இக்காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிலர் வாகனங்களை நிறுத்தி சம்பவத்தை காணொளியாகப் பதிவு செய்துள்ளனர்.
மலேசியா மற்றும் பிரேசில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விளம்பரத் திரைகளை உடனடியாக முடக்கியதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில், ‘Leakers$’ என்ற டெலிகிராம் குழு இந்தச் சைபர் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. விளம்பரப் பலகைகளுக்கு உள்ளடக்கங்களை அனுப்பும் மென்பொருளில் காணப்பட்ட பாதுகாப்புக் குறைபாட்டைப் பயன்படுத்தி, பாதுகாப்பற்ற ஆயிரக்கணக்கான கணினி அமைப்புகளை அடையாளம் கண்டதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பிணையத் தொகை எதையும் கோரவில்லை எனக் கூறியுள்ள இக்குழுவின் அறிவிப்பு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக எகிப்து உள்துறை அமைச்சகம் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

