மன்னார் மாவட்டத்தில் ரூ.473 மில்லியன் செலவில் 217 அபிவிருத்தித் திட்டங்கள்
‘பிரஜா சக்தி’ வறுமை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் ரூ.473 மில்லியன் பெறுமதியான 217 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 47,085 பேருக்கு நேரடிப் பயன்கள் கிடைக்கவுள்ளன. இத்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டம் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் மன்னார் நானாட்டான் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நாடு முழுவதும் 15,000 இற்கும் மேற்பட்ட கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. மன்னார் மாவட்டத் திட்டங்களின் பௌதீக முன்னேற்றம் 47.28 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், திட்டங்களைத் துரிதப்படுத்தி மக்களுக்கு விரைவாகப் பயன்களை வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

