தலைமன்னாரில் பதற்றம் – கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் தாய் உயிரிழப்பு

தலைமன்னார்: தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த கோகுலன் சோனியா (28) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்த சோனியா, உடனடியாக தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய அவரது கணவர் தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் வைத்து தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சோனியாவுக்கு 7 மற்றும் 10 வயதுடைய இரண்டு பிள்ளைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கணவன்–மனைவிக்கிடையில் முன்னதாக பிரிவு காணப்பட்டிருந்த நிலையில், அண்மையில் இருவரும் மீண்டும் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin