மன்னாரில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக முறைப்பாடு – இருவர் கை-து

மன்னாரில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக முறைப்பாடு – இருவர் கை-து; மேலும் பலரைத் தேடும் பொலிஸார்!!!

மன்னார் பகுதியில் 12 வயது சிறுமி ஒருவரை பலர் இணைந்து பா-லி-ய-ல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவனும் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடம் இருந்து கார் ஒன்றும் ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin