இலங்கைக்கான புதிய பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் பிரதி அமைச்சருடன் சந்திப்பு!

இலங்கைக்கான புதிய பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் பிரதி அமைச்சருடன் சந்திப்பு!

இலங்கைக்கான புதிய பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் டி.எம். சலாஹுதீன் மஹ்மூத், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை நேற்று (06) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, இலங்கை – பங்களாதேஷ் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், பங்களாதேஷ் சுகாதார அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரின் எதிர்கால விஜயங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

 

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, பொருளாதார மற்றும் பிராந்திய ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் இருதரப்பினரும் கலந்துரையாடினர்.

Recommended For You

About the Author: admin