பிரான்ஸ் நாட்டின் 250 பெண் வீராங்கனைகள் பங்கேற்கும் ‘Le Raid Amazones’ போட்டி இலங்கையில் ஆரம்பம்!

பிரான்ஸ் நாட்டின் 250 பெண் வீராங்கனைகள் பங்கேற்கும் ‘Le Raid Amazones’ போட்டி இலங்கையில் ஆரம்பம்!

உலகப் புகழ்பெற்ற பெண்களுக்கான சாகச விளையாட்டுப் போட்டியான ‘Le Raid Amazones’ தொடருக்கு இலங்கை 8ஆவது முறையாக அனுசரணை வழங்குகிறது. இம்முறை போட்டிகள் நவம்பர் 10ஆம் திகதி வரை களுத்துறை நகரை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. இதில் பிரான்ஸைச் சேர்ந்த 250 பெண் போட்டியாளர்களும், சர்வதேசப் பணிக்குழுவைச் சேர்ந்த 55 பேரும் பங்கேற்கின்றனர்.

 

கயாக் படகோட்டம், சைக்கிள் ஓட்டம், ஓட்டம் உள்ளிட்ட சாகசப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. மேலும், காலி கோட்டையை மையமாகக் கொண்டு புதையல் தேடும் போட்டியும் நடைபெறவுள்ளது.

 

இந்நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டார்.

Recommended For You

About the Author: admin