நாமல் ராஜபக்சவை ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியலை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எயார்பஸ் விமான கொள்வனவு பரிவர்த்தனையின் போது ரூ. 100 மில்லியன் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கடந்த செப்டெம்பர் 04ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இத்துடன், இவ்விவகாரத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தனியாக வழக்கு விசாரணை நடத்தி வருகிறது.

