இலங்கைக்கு 3 டன் காசநோய் மருந்துகளை அன்பளிப்பாக வழங்கியது இந்தியா!
இலங்கையின் பொது சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில், சுமார் 3 டன் எடையுள்ள காசநோய் (Anti-Tuberculosis) தடுப்பு மருந்துகளை இந்தியா கொழும்புவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்திய விமானப் படையின் சி-130ஜே (C-130J) ரகப் போக்குவரத்து விமானம் மூலம் இந்த மருத்துவ உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுகாதார அமைப்பிற்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்க இந்தியா எப்போதும் உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியான காலங்களில் இலங்கைக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

