கல்வித்துறைக்கு 749 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு! – பிரதமர் ஹரிணி

கல்வித்துறைக்கு 749 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு! – பிரதமர் ஹரிணி அறிவிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்காக 749 பில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றிலேயே கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய நிதி இதுவெனவும், அரசாங்கத்தின் மொத்த செலவினத்தில் இது 12 சதவீதத்திற்கும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதுவரை 4,570 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகளும், 6,000 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு இணைய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், 2025ஆம் ஆண்டில் இலங்கை 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளதாகவும், 5 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதிலிருந்து நீண்டகால பொருளாதார மாற்றத்தை நோக்கி நாட்டை முன்னேற்றுவதே 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin