அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி வரி அதிரடியாகக் குறைப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி வரி அதிரடியாகக் குறைப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரிகளைக் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (12) நாடாளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்த வரிக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவித்திருந்தார்.

 

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நெத்தலிக்கான விசேட பண்ட வரி 100 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

அதேபோன்று, ஒரு கிலோகிராம் மாசிக்கான வரி 202 ரூபாவிலிருந்து 10 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், தூளாக்கப்பட்ட மற்றும் தூளாக்கப்படாத காய்ந்த மிளகாய்க்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரியும் ஒரு கிலோகிராமுக்கு 50 ரூபாவாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin