கண்டி போகம்பரை பழைய சிறைச்சாலை மீண்டும் திறப்பு: 75 கைதிகள் மாற்றம்!

கண்டி போகம்பரை பழைய சிறைச்சாலை மீண்டும் திறப்பு: 75 கைதிகள் மாற்றம்!

பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றி நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வர்த்தமானி வெளியிட்டதைத் தொடர்ந்து, புனரமைக்கப்பட்ட அச்சிறைச்சாலைக்கு கொழும்பு மற்றும் மகசீன் சிறைச்சாலைகளிலிருந்து 75 கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

 

இவர்களுக்கான உணவை பல்லேகலை தும்பர சிறைச்சாலை வழங்கவுள்ளது.

 

1876-இல் தொடங்கப்பட்ட இச்சிறைச்சாலையிலிருந்த கைதிகள் 2014-இல் பல்லேகலைக்கு மாற்றப்பட்டனர். பின்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் எழுந்த இடநெருக்கடியைக் குறைக்க போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் திறக்க அரசு தீர்மானித்தது.

 

தற்போது அங்கு புனரமைக்கப்பட்டுள்ள 94 அறைகளில் 750 கைதிகளைத் தங்க வைக்க முடியும்.

Recommended For You

About the Author: admin