இலங்கையில் ஒளிபரப்பை ஆரம்பிக்கும் ‘அஹசா டிவி’ சிங்கள மொழி தொலைக்காட்சி

இலங்கையில் ஒளிபரப்பை ஆரம்பிக்கும் ‘அஹசா டிவி’ சிங்கள மொழி தொலைக்காட்சி

இலங்கையின் சிங்கள மொழித் தொலைக்காட்சி ஊடகத் துறையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில் ‘அஹசா டிவி’ (AhasaTV) தனது ஆரம்ப ஒளிபரப்பை விரைவில் தொடங்கவுள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செய்தி, நடப்பு விவகாரங்கள், பொழுதுபோக்கு, கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த புதிய தொலைக்காட்சி சேனல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள மொழிப் பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு தரமான மற்றும் புதுமையான உள்ளடக்கங்களை வழங்கும் நோக்கில் அஹசா டிவி தனது ஊடகப் பயணத்தை ஆரம்பிக்கத் தயாராகியுள்ளது.

சேனலின் உத்தியோகபூர்வ அறிமுகம் மற்றும் மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin