ஆற்று நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது: நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள எச்சரிக்கையை விலக்கியது
பல ஆற்றுப் படுகைகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள எச்சரிக்கைகளைத் திரும்பப் பெற்றுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு,
குறித்த நதிப் படுகைகளில் நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மகாவலி ஆறு, களு கங்கையின் துணைப் படுகையான குடா கங்கை, நீல்வலா கங்கை மற்றும் கின் கங்கை ஆகியவற்றிற்கான வெள்ள எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன.

