₹10, ₹20 நோட்டுகளில் அதிரடி மாற்றம்? பிளாஸ்டிக் ரூபாய்க்கு மத்திய அரசு ஒப்புதல்!
1. ₹10 மற்றும் ₹20 மதிப்பிலான பாலிமர் ரூபாய் நோட்டுகளைச் சோதனை செய்ய RBI-க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2. ஒவ்வொரு மதிப்பிலும் தலா 100 கோடி நோட்டுகள் என மொத்தம் 200 கோடி நோட்டுகள் களச் சோதனைக்கு திட்டமிடப்பட்டுள்ளன.
3. காகித நோட்டுகளைவிட நீண்ட காலம் உழைக்கும் வகையில் பாலிமர் நோட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
4. நீடித்த பயன்பாடு, மடங்குதல் மற்றும் கையாளும் தன்மை உள்ளிட்ட அம்சங்கள் பல்வேறு சூழல்களில் சோதிக்கப்படும்.
5. தற்போதைய காகித ரூபாய் நோட்டுகளை மாற்றும் திட்டம் இல்லை. சோதனை வெற்றியடைந்தால் மட்டுமே வழக்கமான பயன்பாட்டுக்கான அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.

