என்விடியா சிப்கள் சீனாவுக்குக் கடத்தப்பட்டதா? டிரம்ப் அமைச்சரவைக்குள் வெடித்த மோதல்!
1. அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், என்விடியா சிப்கள் சீனாவுக்குச் சென்ற விவகாரத்தில் வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக்கைப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
2. சிங்கப்பூரைச் சேர்ந்த Megaspeed நிறுவனத்தை ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகள் பல மாதங்களாக வலியுறுத்தியதாக பெசென்ட் தெரிவித்துள்ளார்.
3. அந்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வர்த்தகத்துறையிடம் இருந்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே பெசென்டின் குற்றச்சாட்டு.
4. Megaspeed நிறுவனம் என்விடியாவின் மேம்பட்ட AI சிப்களை வாங்கி, அமெரிக்க ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மீறி சீனாவுக்குத் திருப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெறுகிறது. இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
5. அமெரிக்காவின் தொழில்நுட்ப ஆதிக்கத்தைப் பாதுகாக்க வேண்டுமா, அல்லது சீனாவையும் அமெரிக்கத் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கச் செய்ய வேண்டுமா என்ற கொள்கை விவாதமும் இந்த விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது

