நிலச்சரிவு அபாயப் பகுதியில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடமைப்புத் திட்டம்

நிலச்சரிவு அபாயப் பகுதியில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடமைப்புத் திட்டம்

நிலச்சரிவு அபாயம் மிகுந்த பதுளை மாவட்டத்தின் உவாபரணகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அலுகொல்ல தோட்டத்தில் 51 புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (29) நடைபெறவுள்ளது.

 

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியும் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையும் கொண்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. 13 ஆண்டுகளாக பாதுகாப்பான வீடுகள் இன்றி வாழ்ந்து வந்த 51 குடும்பங்கள் இதன் மூலம் பயனடையவுள்ளன.

 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 32 லட்சம் ரூபா பெறுமதியிலான வீடுகள் வழங்கப்படவுள்ளன. “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த திட்டம் கருதப்படுகிறது.

Recommended For You

About the Author: admin