சுசந்திகா ஜயசிங்காவின் 24 ஆண்டுகால சாதனையை முறியடித்த சீன இளம் வீராங்கனை!
இலங்கை தடகளத்தின் முன்னணி வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்கா, 2002 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 100 மீற்றர் ஓட்டத்தில் பதிவு செய்த 11.15 வினாடிகள் என்ற சாதனை 24 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடிக்கப்பட்டுள்ளது.
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற சீனாவின் இளம் ஓட்ட வீராங்கனை சென் யூஜி (Chen Yujie), 100 மீற்றர் இறுதிப் போட்டியை 11.06 வினாடிகளில் நிறைவு செய்து புதிய ஆசிய விளையாட்டு சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இதன்மூலம் சுசந்திகாவின் நீண்டகால சாதனை முறியடிக்கப்பட்டாலும், ஆசிய தடகள வரலாற்றில் அவரது பெயர் இன்னும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

