ஆசிய விளையாட்டில் வரலாறு படைத்த ருமேஷ் தரங்க – இலங்கைக்கு முதல் தங்கம்!
ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெறும் 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க பதிரகே தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ருமேஷ் 88.55 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் 2026 ஐச்சி–நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் முதல் தங்கப் பதக்கத்தை அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.
மேலும், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றையும் ருமேஷ் படைத்துள்ளார்.
இந்த வெற்றி, 2026ஆம் ஆண்டில் ருமேஷ் தரங்க பெற்றுவரும் சர்வதேச வெற்றிகளின் தொடரில் மற்றுமொரு முக்கிய சாதனையாக அமைந்துள்ளது.

