சூரிய மின்சாரத் துறையை அரசு பலவீனப்படுத்துகிறது – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசின் அண்மைய கொள்கை மாற்றங்கள் இலங்கையின் சூரிய மின்சாரத் துறையை பலவீனப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய சூரிய மின்சார இணைப்புகளுக்கான Net Metering மற்றும் Net Accounting திட்டங்களை நிறுத்தி Net Plus திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பது முதலீடுகளை பாதிக்கும் என அவர் கூறினார்.
மேலும், சூரிய மின்சாரத் திட்டங்களுக்கான அனுமதிகள் தாமதப்படுத்தப்படுவதாகவும், 2,500 மெகாவாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் நாட்டிற்கு பெரும் சேமிப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

