இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு; பாதுகாப்புக்கு கோடிக்கணக்கில் செலவு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், இஸ்லாமாபாத்தில் திட்டமிட்டிருந்த பிரம்மாண்ட போராட்டத்தை அக்டோபர் 4-ஆம் திகதிக்கு

ஒத்திவைத்துள்ளனர்.

 

போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகள் மற்றும் நுழைவு வாயில்கள் சரக்கு கொள்கலன்கள் கொண்டு முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளன.

 

மேலும், நிலைமையைக் கையாள ஆயிரக்கணக்கான கூடுதல் காவல்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த பிரம்மாண்ட பாதுகாப்பு பணிகளுக்காக மட்டும் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் அமெரிக்க டாலருக்கும் (US$300,000) அதிகமாகச் செலவாகலாம் என அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Recommended For You

About the Author: admin