இலங்கையின் 30% யானைகள் செவித்திறனை இழந்துள்ளன

இலங்கையின் 30% யானைகள் செவித்திறனை இழந்துள்ளன; யானை வெடிகளே காரணம் என அமைச்சர் குற்றச்சாட்டு

இலங்கையில் வாழும் யானைகளில் சுமார் 30 வீதமானவை செவித்திறனை இழந்துள்ளதாகவும், தரமற்ற யானை வெடிகள் பயன்படுத்தப்படுவது அதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் விவசாய மற்றும் கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 

வனஜீவி அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர், மனிதர்–வனவிலங்கு மோதல்கள் விவசாயத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகக் கூறினார்.

 

காடுகளில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறை நிலவுவதால் யானைகள் உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

வனப்பகுதிகளில் போதுமான உணவு மற்றும் நீர் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Recommended For You

About the Author: admin