காத்தான்குடி இடம்பெற்ற சைக்கிள் திருவிழா 2026 

காத்தான்குடி இடம்பெற்ற சைக்கிள் திருவிழா 2026

ஆரோக்கியமான நாளைக்காக மிதிவண்டி எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி சைக்கிள் திருவிழா 2026 இன்று ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடி கடற்கரையில் நடைபெற்றது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் காத்தான்குடி YESDO மற்றும் RiSE Sri Lanka ஆகிய அமைப்புகள் இணைந்து இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

 

இந்நிகழ்வானது சமூக ஒற்றுமைக்கும் ஆரோக்கியத்திற்குமான அழைப்பு.

மிதிவண்டி ஓட்டுதல் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை, விளையாட்டு உணர்வு மற்றும் தூய்மையான, பசுமையான சுற்றுச்சூழலை மேம்படுத்தும் ஒரு சமூக நிகழ்வாக இது வடிவமைக்கப்பட்டதுடன் “உணர்வுபூர்வமாக இணைவோம், சைக்கிளோடு….”

எனும் கருப்பொருளாக அமைந்திருந்தது.

 

இந்நிகழ்வு 4 வயதெல்லை பிரிவுகளாக நடை பெற்றது , 300 க்கும் அதிகமான சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin