டிட்வா சூறாவளி மீட்புப் பணி: இந்திய கடனுதவியில் புதிய வாகனங்கள் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

டிட்வா சூறாவளி மீட்புப் பணி: இந்திய கடனுதவியில் புதிய வாகனங்கள் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை விரைவுபடுத்துவதற்கும், இந்திய அரசாங்கத்தின் ‘சாகர் பந்து’ (Operation Sagar Bandhu) திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட 95 மில்லியன் டொலர் கடனுதவியைப் பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

இதன்கீழ் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் தேவைகளுக்காக அம்பியூலன்ஸ், கழிவு அகற்றும் வாகனங்கள் (Gully bowsers), டிப்பர்கள் மற்றும் சிங்கிள் கெப் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

 

மேலும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சினால் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட புதிய இயந்திர உபகரணங்களைக் கொள்வனவு செய்யும் யோசனைக்கும் அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

Recommended For You

About the Author: admin