2027 சர்வதேச வர்த்தகக் கண்காட்சி: வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சிறப்பு தள்ளுபடி!
இலங்கையின் முன்னணி சர்வதேச வர்த்தகக் கண்காட்சியான “Sri Lanka Expo 2027” விளம்பரப்படுத்துவதற்காக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Airbus A321 Neo விமானம் சிறப்பு வர்த்தக முத்திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையால் (EDB) ஏற்பாடு செய்யப்படும் இக்கண்காட்சி, 2027 ஜனவரி 14 முதல் 17 வரை கொழும்பு BMICH இல் நடைபெறவுள்ளது.
இலங்கையை தெற்காசியாவின் முக்கிய வர்த்தக மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்நிகழ்வில் 750க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 1,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பங்கேற்பர்.
இந்த விமானம் இந்தியா, கட்டார், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சேவை வழங்கி சர்வதேசப் பிரசாரத்தை மேற்கொள்ளும்.
மேலும், வருகை தரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விமானக் கட்டணத்தில் 20% வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

