கத்தாரில் தபால் சேவையில் புதிய தொழில்நுட்பம்; ‘சந்தூகி’ ஸ்மார்ட் பார்சல் பெட்டி அறிமுகம்

கத்தாரில் தபால் சேவையில் புதிய தொழில்நுட்பம்; ‘சந்தூகி’ ஸ்மார்ட் பார்சல் பெட்டி அறிமுகம்

வாடிக்கையாளர்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இல்லாத நேரங்களிலும் பார்சல்களைப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொள்ள உதவும் ‘சந்தூகி’ (Sandooqi) எனும் ஸ்மார்ட் பார்சல் பெட்டி சேவையை கத்தார் போஸ்ட் (Qatar Post) அறிமுகப்படுத்தியுள்ளது.

 

தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இச்சேவை, விநியோகப் பொருட்களைப் பெறுவதை மிகவும் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுகிறது.

 

இத்திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் பார்சல்களைப் பெற நேரில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ‘சந்தூகி’ செயலி (App) மூலம் உருவாக்கப்படும் பாதுகாப்புக் குறியீட்டைப் (PIN Code) பயன்படுத்தி, டெலிவரி முகவர்கள் அந்தப் பெட்டியைத் திறந்து பார்சலைப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்ல முடியும்.

 

பார்சல் பெட்டியில் வைக்கப்பட்டவுடன் வாடிக்கையாளருக்கு உடனடி அறிவித்தல் (Notification) அனுப்பப்படும். 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த ஸ்மார்ட் பெட்டிகள் வாடிக்கையாளர்களின் முகவரியிலேயே பொருத்தப்படும் என கத்தார் போஸ்ட் தெரிவித்துள்ளது.

 

‘சந்தூகி’ எவ்வாறு இயங்குகிறது?

 

PIN குறியீட்டை உருவாக்குதல்: வாடிக்கையாளர்கள் ‘Sandooqi’ செயலியைப் பயன்படுத்தி பிரத்யேக PIN குறியீட்டை உருவாக்கி, அதனைத் தொடர்புடைய டெலிவரி முகவருக்கு அனுப்ப வேண்டும்.

 

QR குறியீட்டை ஸ்கேன் செய்தல்: டெலிவரி முகவர் வருகை தந்ததும், பெட்டியில் உள்ள QR குறியீட்டைச் ஸ்கேன் செய்து அந்த PIN குறியீட்டைப் பெற்றுக்கொள்வார்.

 

பார்சல் பாதுகாப்பு: முகவர் பார்சலை பெட்டியினுள் வைத்து மூடியதும், வாடிக்கையாளருக்கு உடனடி வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது குறுஞ்செய்தி (SMS) மூலம் உறுதிப்படுத்தல் அறிவித்தல் அனுப்பப்படும்.

 

எப்போது வேண்டுமானாலும் பெறுதல்: வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில், இரவிலோ அல்லது பகலிலோ பார்சல்களை எடுத்துக் கொள்ளலாம்.

 

முக்கிய சிறப்பம்சங்கள்:உடனடி அறிவிப்பு: பார்சல் விநியோகம் முடிந்த உடனே வாடிக்கையாளருக்கு அறிவித்தல் அனுப்பப்படும்.24/7 சேவை: 24 மணி நேரமும் எந்த நேரத்திலும் பார்சல்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி.

 

பாதுகாப்பான அணுகல்: ஒவ்வொரு விநியோகமும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (OTP/PIN) மூலம் மேற்கொள்ளப்படும்.

 

வீடுகள் மற்றும் வணிகங்களுக்குப் பொருத்தமானது: தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

கூடுதல் சாதனங்கள் தேவையில்லை: சாவிகள், மின்சாரம் அல்லது இணைய இணைப்பு ஏதுமின்றி மிகவும் எளிமையாக இயங்கும்.

 

முகவரியிலேயே பொருத்துதல்: வாடிக்கையாளரின் வீடு அல்லது அலுவலக முகவரியிலேயே

நேரடி பொருத்தம் செய்யப்படும்.

 

கட்டண விவரங்கள்:

 

இச்சேவைக்கான கட்டணமாக தனிநபர்களுக்கு (Individuals) 999 கட்டார் ரியாலும், வணிக நிறுவனங்களுக்கு (Corporate) 1,999 கட்டார் ரியாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கத்தார் போஸ்ட் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin