மகாவலி நீர் பாதுகாப்புத் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர் கடன்; அமைச்சரவை அனுமதி

மகாவலி நீர் பாதுகாப்புத் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர் கடன்; அமைச்சரவை அனுமதி

இலங்கையின் மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுப்பதற்காக, ஒபெக் சர்வதேச அபிவிருத்தி நிதியத்திடமிருந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவு 536.5 மில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி ஏற்கனவே 200 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

வறண்ட வலயப் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், நீர் வள முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் திறனை அதிகரித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இதன் இரண்டாம் கட்டத்தில் நீர்ப்பாசனக் கால்வாய்கள், நீர் விநியோகக் கட்டமைப்புகள் மற்றும் சுரங்க நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும், விவசாயிகளுக்கான சேவைகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: admin