இலங்கையில் சிறைக் கைதிகளின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி ஆரம்பம்!

இலங்கையில் சிறைக் கைதிகளின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி ஆரம்பம்!

இலங்கையில் சிறைக் கைதிகளின் படைப்பாற்றல் திறன்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சிரசர சில்ப 2026’ கைத்தொழில் மற்றும் விற்பனைக் கண்காட்சி இன்று (27) பத்தரமுல்லை தியத்த வளாகத்தில் ஆரம்பமானது.

 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையில் ஆரம்பமான இக்கண்காட்சியில், நாட்டின் 28 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தயாரித்த பல்வேறு கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

கைதிகளின் மறுவாழ்வை ஊக்குவித்து, விடுதலையின் பின்னர் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

இந்தக் கண்காட்சி எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.

Recommended For You

About the Author: admin