அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்கள் மூலம் QID புகைப்படத்தை மாற்றும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்கள் மூலம் QID புகைப்படத்தை மாற்றும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

கத்தாரில் அடையாள அட்டையில் (QID) உள்ள புகைப்படத்தை அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்கள் (Studios) மூலம் புதுப்பிக்கும் புதிய சேவையைத் தொடங்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு (MOI) ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

 

இச்சேவை அமைச்சின் இணையதளம் மற்றும் மெட்ராஷ் செயலி வாயிலாக இணைக்கப்பட்டு ஆயத்த நிலையில் உள்ளது. இத்திட்டத்திற்காகத் தேர்வாகும் புகைப்பட நிலையங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

அமைச்சின் அதிகாரப்பூர்வ அறிமுகத் திகதி, விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இச்சேவை செயல்பாட்டுக்கு வரும்போது பொதுமக்கள் அரசு சேவை மையங்களுக்குச் செல்லாமல் அருகிலுள்ள புகைப்பட நிலையங்களிலேயே எளிதாக QID புகைப்படத்தைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

Recommended For You

About the Author: admin