மீரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையத்திற்கு ரூ. 161 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் நன்கொடை!

மீரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையத்திற்கு ரூ. 161 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் நன்கொடை!

மீரிகமவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ‘தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையத்திற்கு’ பிரபல நன்கொடையாளர் நஹில் விஜேசூரிய ரூ.161 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட இம்மையம் முழுமையாகச் செயல்படும் போது, ஆண்டிற்கு 1,000க்கும் மேற்பட்ட சிக்கலான சிகிச்சைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் யோசனைக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள இம்மையத்தில், பொது சுகாதார அமைப்பின் ஊடாக நோயாளர்களுக்கு முழுமையாக இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

நாடளாவிய ரீதியிலுள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சிகிச்சையளிக்கும் வகையில் இது ஒரு தேசிய வள மையமாகச் செயல்படும்.

Recommended For You

About the Author: admin