கடலை காக்க வந்த 16 வயது சிறுவனின் ஆமை ரோபோ!
கனடாவை சேர்ந்த பள்ளி மாணவன் Evan Budz, நம்மால் கண்ணால் பார்க்கவே முடியாத கடலில் உள்ள நுண்ணிய பிளாஸ்டிக் கழிவுகளை கண்டுபிடிக்க ஒரு அசத்தலான ரோபோவை உருவாக்கியுள்ளார்.
ஒரு முறை குடும்பத்துடன் கேம்பிங் சென்ற போது பார்த்த ஆமையின் நீச்சலில் இருந்து இந்த ஐடியா அவருக்கு வந்ததாம். கிட்டத்தட்ட 4000 மணி நேரம் உழைத்து, சத்தம் எழுப்பும் ப்ரொப்பல்லருக்கு பதிலாக, ஆமை போலவே துடுப்புகளால் அமைதியாக நீந்தும் வகையில் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளார்.
இதில் அவர் உருவாக்கியுள்ள 3D ஹோலோகிராபிக் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் ஹைலைட். ஏரி, ஆறு, கடல் என எங்கு விட்டாலும் தண்ணீரை அங்கேயே நேரடியாக ஆய்வு செய்து, 10 மைக்ரோ மீட்டர் அளவுள்ள மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்களை கூட 94% துல்லியத்துடன் கண்டறியுமாம். இதற்காக சாம்பிளை லேபுக்கு எடுத்துச் செல்லவே தேவையில்லை.
இந்த அற்புதமான கண்டுபிடிப்புக்காக, உலகின் மிகப்பெரிய பள்ளி அறிவியல் போட்டியான 2026 Regeneron ISEF-ல் 50,000 டாலர் மதிப்புள்ள Gordon E. Moore விருதை வென்றுள்ளார்.
சின்ன வயதில் இவ்வளவு பெரிய சமூக அக்கறையுடன் கூடிய கண்டுபிடிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
தகவல்: Society for Science (Regeneron ISEF)

