ரோபோக்கள் நம்மிடம் பேசுவதோடு மட்டும் நிற்காமல்… நாம் சொல்வதைப் புரிந்து கொண்டு வேலை செய்யத் தொடங்கினால்?
சீனாவின் Spirit AI நிறுவனத்தின் இணை நிறுவனர் Gao Yang கூறுகையில், 2027 நடுப்பகுதிக்குள் humanoid robots இயல்பான மொழியில் வழங்கப்படும் கட்டளைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற பல்வேறு physical actions-ஐ மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேறலாம்.
இதற்காக நிறுவனம் மனிதர்கள் வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் செய்யும் அன்றாட செயல்களின் தரவுகளை சேகரித்து, ரோபோக்களின் “brain” எனப்படும் AI systems-ஐ பயிற்றுவித்து வருகிறது.
ஏற்கனவே சில கட்டுப்படுத்தப்பட்ட living-room சூழல்களில் எளிய பணிகளைச் செய்வதில் அதன் robots 90% success rate பெற்றுள்ளதாக Reuters தெரிவிக்கிறது.
ஆனால் வீட்டில் பயன்படுத்தக்கூடிய முழுமையான humanoid robot வருவதற்கு இன்னும் அதிக காலம் தேவைப்படலாம்.
🔧 குப்பி மூடியைத் திறப்பது போன்ற நுணுக்கமான செயல்கள்,
🧠 எதிர்பாராத புதிய பணிகளைப் புரிந்துகொள்வது,
🏠 குழப்பமான வீட்டுச் சூழலில் பாதுகாப்பாக செயல்படுவது
போன்றவை இன்னும் பெரிய சவால்களாக உள்ளன.
Spirit AI, 2024ல் தொடங்கப்பட்டதிலிருந்து $670 million-க்கும் மேல் நிதி திரட்டியுள்ளதாக Reuters தெரிவித்துள்ளது.
2027ல் ரோபோக்களின் AI திறனில் உண்மையான திருப்புமுனை வருமா?

