தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: 4.41 லட்சம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்!

தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின்கீழ், 1 கிராம் எடையிலான 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்கான ஒப்பந்தப் புள்ளியில் 11 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், குறைந்த செய்கூலி மற்றும் விலையைக் குறிப்பிட்ட இரு நகையகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 

குறைந்த விலைப்புள்ளி அடிப்படையில் ஒரு நிறுவனத்திற்கு 70 சதவீதமும், மற்றொரு நிறுவனத்திற்கு 30 சதவீதமும் தயாரிப்புப் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளான 2026 செப்டம்பர் 15 அன்று தொடங்குகிறது.

 

2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் அனைவரும் இந்தத் திட்டத்தின் மூலம் தங்க மோதிரம் பெறும் பயனாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin